Private company
அடிடாசு நிறுவனம்
Logo: Adidas, Public domain, via Wikimedia Commons3
அடிடாஸ் (Adidas AG) என்பது ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆடை, காலணி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பவேரியாவில் உள்ளது. இது அடிடாசு குழுமத்தின் சார்புவைப்பு நிறுவனமாகும். அடிடாசு குழுமத்தில் ரீபொக் விளையாட்டுடை நிறுவனம், (அவற்றின் ஆஷ்வொர்த் உடைகள், ராக்போர்ட் நிறுவனங்கள் உட்பட) டெய்லர்மேடு-அடிடாசு குழிப்பந்து நிறுவனம், பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகத்தில் 9.1% பங்குகள் உள்ளன. விளையாட்டு காலணிகளைத் தவிர பைகள், சட்டைகள், கடிகாரங்கள், கண்கண்ணாடிகள் மற்றும் பிற விளையாட்டு, உடை தொடர்புடைய பொருட்களை அடிடாசு தயாரிக்கிறது. ஆடை, காலணி விற்பனையில் ஐரோப்பாவின் முன்னணி நிறுவனமாகவும், உலகளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது.(முதல் இடத்தில் நைக்கி நிறுவன்ம் உள்ளது)2 From the ta Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1Wikidataஅடிடாசு நிறுவனம் on Wikidata
- 2Wikipediaஅடிடாசு நிறுவனம் on the ta Wikipedia
- 3Wikimedia Commonsஅடிடாசு நிறுவனம் logo by Adidas, Public domain